Date : 17.08.2026
உலகம் மேலும் முன்னேற்றமடைந்தது. சமூக கட்டமைப்பில் இன்னும் மாற்றங்கள் நிகழ்ந்தது. படைப்பின் நீரோட்டத்தில் ஒரு இயற்கையான நிகழ்வாக மனிதன் பணத்தை கண்டுபிடித்தான். பணம் படிப்படியாக உடல் இன்பத்திற்கான சாதனமாக ஆயிற்று. இது மக்களிடையே பதட்டத்திற்கு வழி வகுத்தது. ஏனெனில், ஒருவர் அதிகப்படியான பணத்தை குவிக்க முடிந்தால் அவர் பணக்காரர் ஆனார். பணக்கார மக்கள் நிறைய சொத்துக்கள் மற்றும் வாழ்க்கைக்கு தேவையான அனைத்து வசதிகளையும் சொந்தமாக்கிக்கொள்ள நினைத்தால் அது அவர்களால் முடிந்தது. வைசியர்கள் ஆதிக்கமிக்க சமுதாயத்தில் வைசியர்கள் மிகவும் செல்வசெழிப்பான வகுப்பினராக இருந்தனர். மற்ற வகுப்பினர் தங்களை காத்துக்கொள்வதற்காக அவர்களுடைய பணத்தை முழுமையாக சார்ந்திருந்தனர்.
இந்த வைசிய மேலாதிக்க சமூகம் இன்றளவும் இருக்கிறது. இந்த சுரண்டலின் விளைவாக விப்ர, மற்றும் க்ஷத்ரிய சமூகத்தினர் சூத்திரர்கள் நிலைக்கு தாழ்ந்துவிட்டனர். ஒரு சில மனிதர்களே செல்வசெழிப்பை அடைய முடியும் என்பது இயற்கை விதியாகும். ஆனால் சூத்திரர்கள் பெரும்பான்மையாக உள்ளனர். இன்றைக்கு இந்த சூத்திரர்கள் கூட்டாக இணைந்து வைசியர்களின் மேலாதிக்கத்தை அழித்து அவர்களை நிலமூலமாக்க உறுதிப்பூண்டுள்ளனர். வளர்ந்துவரும் சூத்ரர்களின் ஆதிக்கம் தெளிவாக தெரிகிறது. ஆனால் சூத்ரர்களின் இந்த ஆதிக்கம் முழுமையான உண்மையா?
Date : 07.08.2026
உராய்வு மூலமாக முதன்முதலில் நெருப்பின் பயன்பாட்டை கண்டுபிடித்தவர், குளிரான பனிக்காலத்தின் இரவில் உறையச்செய்த மனித உடலுக்கு வெப்பத்தின் சுகமான தொடுதலை வழங்கியவர்கள், மேன்மையான மக்களானார்கள். இந்த மேன்மை திறமையால் எய்தப்பட்டது, வெறும் உடல் வலிமையால் அல்ல.மனித சமுதாயம் அத்தகைய மக்களை ரிஷிகள் அல்லது மனித நலத்தின் முன்னோடிகள் என்ற மிக உயர்வானவர்களாக கருதினார்கள்.
பிற்காலத்தில் உணவை நெருப்பில்சுட்டு சாப்பிடுவதன் மூலம் அதை சுவை மிகுந்ததாகவும் எளிதில் செரிக்கக்கூடியதாகவும் ஆக்கினார்கள். நெருப்பை எப்படி பயன்படுத்துவது என்று மக்களுக்கு முதலில் சொல்லிக்கொடுத்தவர் ஒரு ரிஷி என்று பாராட்டப்பட்டார், ஒரு முன்னாள் ரிஷியின் சீடர். நிர்வாணமான மனித உடலுக்கு ஆடை அணிவதற்காக நெசவு கலையை கண்டுபிடித்தவர், விலங்கை எப்படி பழக்கி, தாயின் பால் கிடைக்காத குழந்தைகளுக்கு பசுவின் பாலை வழங்குவதற்கு கற்றுக்கொடுத்தவர், மாட்டு வண்டியை கண்டுபிடித்து போக்குவரத்து பிரச்சினையை தீர்த்தவர்கள் அனைவரும் ரிஷிகள் என்று அழைக்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் மனித சமுதாயத்தின் மூதாதையர்கள் என்று கௌரவிக்கப்பட்டனர், மேலும் அவர்கள் அனைவரும் நினைவில்கொள்ளத் தக்கவர்கள், வரவேற்க தக்கவர்கள், போற்றுதலுக்குரியவர்கள். ரிஷிகள் மனித சமுதாயத்திற்காக புதிய கண்டுபிடிப்புகளின் முன்னோடிகளாவார்கள். க்ஷத்ரிய சமுதாயம் அவர்கள் மீது விப்ரர்கள் என்ற மிகப்பெரும் மரியாதை வைத்திருந்தனர், அவர்களுக்கு அளவற்ற மரியாதையை வாரி வழங்கினார்கள்.
Date : 30.07.2026
இத்தகைய சூழ்நிலைகள் மனிதர்களுடைய அறிவாற்றலை பெருக்குவதற்கோ அல்லது சுயபரிசோதனை பாதையில் செல்வதற்கோ இணக்கமாக இல்லை. அந்த நாட்களில் இரக்கமற்ற இயற்கைக்கு எதிராக தங்களை பாதுகாத்துக்கொள்ளவே தங்களுடைய ஆற்றல் அனைத்தையும் மக்கள் பயன்படுத்தினார்கள். அதுமட்டுமின்றி, கடுமையாக போராட்டம் நிறைந்த அந்த காலகட்டத்தில் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால் உடல் வலிமைதான். மிக தொலைவான அந்த யுகத்தில் மக்கள் ஒரு விஷயத்தின் மதிப்பை நன்கு உணர்ந்துகொண்டனர் - வலிமைதான் சரியானது என்பதை உணர்ந்துகொண்டனர். அவர்களுடைய வாழ்க்கைக்கு அனைத்து சக்திகளும் எதிராக இருந்ததால், தனிமையான, அங்கும் இங்குமாக சிதறிய வாழ்க்கை பாதுகாப்பான வாழ்க்கை இல்லை என்பதை அவர்கள் உணர்ந்துகொண்டனர். ஆகவே அவர்கள் ஒன்று சேர்ந்து போராடுவதன் மூலம் தங்களை தற்காத்துக்கொள்ளும் ஒரே நோக்கத்திற்காக ஒருவருக்கொருவர் நெருக்கமாக வந்து நிறைய சிறு சிறு குழுக்கள் அல்லது குலமாக உருவாக்கிக்கொண்டனர். அந்த நாட்களில், மிகவும் வலிமையான ஒருவன் அந்த குழுவின் அல்லது அந்த குலத்தின் குழு தலைவனாக ஆனான் மேலும் அவனை அந்த சமூகத்தின் குளபதியாக வழிபட்டனர். பண்டைய காலத்தில் முதல் க்ஷத்ரிய இனம் இவ்வாறுதான் உருவாயிற்று.
சமுதாயத்தின் பரிணாம வளர்ச்சி:
மனித இனத்தின் அறிவு வளர்ச்சி ஒரே சீராக இருப்பதில்லை. இரண்டு நபர்கள் ஒத்திருக்கமாட்டார்கள். காலத்தின் கண்ணோட்டத்தில், பழங்கால மக்களுடைய அறிவு இன்றைய மக்களுடைய அறிவைவிட குறைவாகவே இருந்தது. பத்து இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு, ப்ரம்ம சக்கரம் அல்லது ஸ்ருஷ்டி சக்கரத்தின்படி முதல் மனித குழந்தை பிறந்தபொழுது, இந்த பூமி இன்று இருப்பதை போல பாதுகாப்பாக இல்லை. அந்த யுகத்தில் மனிதர்கள் ஆக்ரோஷமான விலங்குகளும், ஊர்வன விலங்குகளும் நிறைந்த முற்றிலும் அடர்த்தியான காடுகளால் சூழப்பட்டிருந்தார்கள்-கொடூரமான பற்கள் நீட்டிக்கொண்டிருக்கும் இரை தேடுகின்ற பெரிய மாமிசம் உண்ணும் உயிரினங்களால் சூழப்பட்டிருந்தனர். அவர்களை இடி, புயல், சூறைக்காற்றுகள் மற்றும் விண்கற்களிலிருந்தும் பாதுகாக்கும் இனிய வீடுகள் அவர்களுக்கில்லை. வாட்டி வதைக்கும் நன் பகல் சூரியன் முதல் மனித குழந்தையின் வாழ்வையே அழிக்க முயற்சித்தது. அந்த காலத்தில் இத்தகைய சுற்று சூழலைத்தான் மனிதர்கள் கண்டனர்.
Date : 25.06.2026
ஒரு குறிப்பிட்ட பொருளாதார மண்டலத்தின் தரநிலை மற்றும் முன்னேற்றத்தை நிர்ணயம் செய்வதற்கு தனி நபர் வருமானத்தை கணக்கிடும் முறை அறிவியல் குறியீடுக்கு ஏற்ப இல்லை. ஏனெனில், அது தேசிய வருமானத்தை ஒட்டுமொத்த மக்கள் தொகையில் வகுக்கப்படுகிற எளிமையான கணக்கிடும் முறையாகும், அது ஒரு ஏமாற்று வழிமுறையாகும். தனி நபர் வருமானத்தின் சராசரியைத்தான் காட்டுகிறது, தனி நபர் வருமானத்திலுள்ள வேறுபாடுகளை காட்டுவதில்லை. பண வீக்கத்தை கருத்தில் கொண்டால் தனி நபர் வருமானத்தை கணக்கிடும் முறையின் நம்பகத்தன்மை மேலும் குறையும்.
உதாரணமாக, ஒரு நபருடைய வருமானம் அதிகமாக இருக்கும், ஆனால் அவருடைய வாழ்க்கைக்கு தேவையானவற்றை பூர்த்தி செய்துகொள்ள முடியாது. எனவே, முன்னேற்ற பயன்பாட்டு கொள்கையின்படி (PROUT) ஒருவருடைய வாங்கும் சக்தியை கணக்கிடும் முறைதான் சரியான முறையாகும். தற்போதுள்ள தனி நபர் வருமானத்தை கணக்கிடும் முறை அறிவியல் பூர்வமானது அல்ல, அது ஒரு ஏமாற்று வேலை.
மு. பொய்யாமொழி
தலைவர்
தமிழர் கழகம்
Date : 13.03.2026
1) தற்பொழுது தமிழ் நாட்டில் 26 வேலை நாட்கள் அடிப்படையில் குறைந்தபட்ச ஊதியம் 7200 அதாவது சராசரியாக ஒரு நாளைக்கு 277 ரூபாய்.
2) முதல் கட்டமாக தமிழர் கழகம் குறைந்தபட்ச ஊதியம் மாதம் 9000 ரூபாய் நிர்ணயம் செய்யும் 30 வேலை நாட்கள் அடிப்படையில் ஒரு நாளைக்கு 300 ரூபாய், (30×300).
3) கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் வாராந்திர அடிப்படையில் 2100 ரூபாய். மாதம் இரண்டு நாள் சம்பளத்துடன் விடுப்பு வழங்க வேண்டும்.
ஆறு மாதம் ஒருமுறை அகிலt இந்திய நுகர்வோர் விலை குறியீடுக்கு ஏற்ப பஞ்சப்படி வழங்க வேண்டும்.
4) இதை மீறுவோருக்கு இரண்டு மடங்கு அபராதம் விதிக்கப்படும். சம்பளம் பணியாளர் வங்கி கணக்கில் மாதத்தின் முதல் நாள் வரவு வைக்கப்பட வேண்டும்.
Date : 19.04.2024
வருமான வரியை ரத்து செய்பவர்களுக்கு வாக்களியுங்கள், 100% வேலைவாய்ப்பு அளிப்பவர்களுக்கு வாக்களியுங்கள், விவசாயத்தை தொழிலாக அறிவிப்பவர்களுக்கு வாக்களியுங்கள், விவசாய விளைபொருட்களுக்கு இடை தரகர்களை ஒழித்து விவசாயிகளே விலை நிர்ணயம் செய்யும் உரிமை வழங்குபவர்களுக்கு வாக்களியுங்கள், அத்தியாவசிய உணவு பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்பவர்களுக்கு வாக்களியுங்கள், மக்களுடைய வாங்கும் சக்தியை அதிகரிக்கும் கட்சிக்கு வாக்களியுங்கள். இங்குள்ள ஒவ்வொரு கட்சியும் மதத்தையும், சாதியையும் கட்டிக்கொண்டு அரசியல் செய்கிறார்கள்.
சிந்திக்க தெரியாதவதான் இவர்களுக்கெல்லாம் வாக்களிப்பான். இங்கே பி ஜே பி மட்டுமே கருப்பு பணம் வைத்திருக்கலாம். ஊழலை ஒழிக்கும் வரை மோடி ஓயமாட்டர் ஆனால் கருப்பு பணம் வைத்திருக்கலாம். அதற்கு தேர்தல் பாத்திரம் சாட்சி, கடன் வாங்கிவிட்டு வெளி நாட்டுக்கு ஒடிபோனவர்கள் சாட்சி. இந்தியாவில் இருக்கும் அனைத்து பெரிய கட்சிகளும் ஊழலை உரம் போட்டு வளர்க்கிறவர்கள்.