தமிழக கழகத்தின் சில செயல் திட்டங்கள்
தமிழர் கழகம் ஒரு அரசியல் கட்சி என்று சொல்வதை விட மக்களுக்கு ஒன்றே மகேசன் தொண்டு என்ற நோக்கத்தை அடிப்படையாகக் கொண்ட பொருளாதார திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்று கொள்கையை முக்கிய நோக்கமாக கொண்டுள்ள சமூக தொண்டாற்றும் ஒரு அமைப்பு தான் தமிழர் கழகம். தமிழக கழகத்தின் தொண்டர்கள் முதல் தலைவர்கள் வரை அனைவரும் ஊழல் மட்டும் இலஞ்சத்திற்கு எதிரான நோக்கத்தை இலட்சியமாகக் கொண்டு மக்களுக்கு தொண்டு செய்ய வேண்டுமென்று தமிழர் கழகம் உறுதி பூண்டுள்ளது அத்தகைய நோக்கத்தை கொள்கையாக கொண்டவர்கள் மட்டுமே தமிழர் கழகத்தின் தொண்டர்களாகவும் அத்தகைய தொண்டர்கள் மட்டுமே தமிழர் கழகத்தின் பொறுப்பாளர்களாகவும் இருக்க முடியும்
- 1. அனைவருக்கும் உணவு, உடை, வீடு, இலவச மருத்துவம் மற்றும் இலவச கல்வி வழங்குவதற்கு அடிப்படை உரிமையாக்கி சட்டம் இயற்றப்படும்.
- 2. சாலை போக்குவரத்து சுங்க வரி குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்
- 3. தொழில் வரி..இரத்து செய்யப்படும்.
- 4. விவசாயத்தை தொழிலாக அறிவித்து விவசாயிகளின் முதலீட்டிற்கும் உழைப்புக்கும் உரிய வருமானம் கிடைப்பதற்கு வழி வகுக்கப்படும்.
- 5. சிறு விவசாயிகளை பாதுகாக்கும் வகையில் கூட்டுறவு முறையிலான விவசாயம் ஊக்குவிக்கப்படும்.
- 6. மின்சாரம் மற்றும் எரிபொருள் உற்பத்தியில் மரபுசாரா தொழில்நுட்பத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
- 7. வருமான வரியை இரத்து செய்து கருப்பு பணத்தை ஒழித்து உள்நாட்டு முதலீடுகளை ஈர்த்து தொழில் வளர்ச்சிக்கு வழிவகை காணப்படும்.
- 8. அடிமட்டத்திலிருந்து ஊழல் மற்றும் இலஞ்சத்தை ஒழிக்க கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
- 9. எந்த உருவிலும் இலஞ்சம் மற்றும் ஊழலற்ற நிர்வாகத்தை வழங்குவதற்கு உத்திரவாதம் அளிக்கிறது.
- 10. நீர் வளத்தை பாதுகாக்கவும் நீர் வளத்தை பெருக்குவதற்கும் இயற்கை வளங்களை பாதுகாப்பதற்காகவும் வல்லுநர் குழு அமைக்கப்படும்.
- 11. வனங்களின் பரப்பளவை விரிவுபடுத்தவும் இயற்கை வளங்களை பாதுகாக்கவும் சிறப்பு நடவடிக்கை எடுக்கப்படும்
- 12. தரிசாக கிடைக்கும் அரசு நிலங்களை வேளாண்மை பயின்ற மாணவர்களுக்கு குத்தகைக்கு விடப்படும்
- 13. ஒவ்வொரு கிராமத்திலும் புதிதாக குளங்கள் ஏரிகள் உருவாக்கி நீர் ஆதாரங்களை பெருக்க நடவடிக்கை எடுக்கப்படும்
- 14. தமிழக நதிகள் அனைத்தும் இணைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
- 15. மத்திய அரசுடன் இணைந்து மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்படும்.
- 16. சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு தடை செய்யப்படும்.
- 17. குற்ற பின்னணி உள்ளவர்களுக்கு தேர்தலில் போட்டியிட அனுமதி வழங்கப்பட மாட்டாது.
- 18. மது மற்றும் போதை பொருள்கள் இல்லாத மாநிலமாக திகழ நடவடிக்கை எடுக்கப்படும்.
- 19. தடையில்லா மின்சாரம் வழங்க வழி செய்யப்படும்
- 20. 100 சதவீதம் வேலைவாய்ப்பு வழங்குவதற்கு தமிழர் கழகம் உத்திரவாதம் அளிக்கிறது.
- 21. அத்தியாவசிய உணவு பொருட்கள் விலை நிர்ணயம் செய்யப்படும்.
- 22. ஒவ்வொரு குடும்பத்திற்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படும்.
ஊழல் மற்றும் சுரண்டலுக்கு எதிராக போராட விரும்புவர்கள் தமிழர் கழகத்தின் உறுப்பினராகுமாறு கேட்டுக்கொள்கிறோம். உங்களுக்காக பணியாற்ற நாங்கள் காத்திருக்கிறோம். உங்கள் ஆதரவை மட்டும் தாருங்கள். உங்களுக்காக போராட நாங்கள் இருக்கிறோம் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி காண்பது எங்கள் நோக்கம். அனைவருக்கும் வேலை எங்கள் இலக்கு. தமிழக மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவது எங்கள் நோக்கம்.